அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோவுக்கான அதிகபட்ச சில்லறை விலை 90 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசிக்கு 75 ரூபாவாகவும் சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி முதல் இந்த விலைக்கட்டுப்பாடு அமுலுக்கு வரும் எனவும் சபை கூறியுள்ளது.
அத்துடன், இந்த விலைகளுக்கு அதிகமாக அரிசியை விற்க வேண்டாம் எனவும், அரிசிக்கான விலையைக் காட்சிப்படுத்த வேண்டும் அவ்வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.