அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை (25) காலை 8.00 மணி முதல் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு நடத்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.