பத்தரமுல்ல பிரதேசத்தில் செயற்படும் அரச நிறுவனங்களின் அலுவலக நேரங்கள் மாற்றப்படவுள்ளன என்று பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை 7.15 மணி முதல் மாலை 3.15 வரை
நேரம் மாற்றப்படவுள்ளது என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ஜே. ரத்னசிறி
தெரிவித்துள்ளார்.