அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.
அதன்படி இன்று இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருவதாக அந்த குழுவின் செயலாளர் எச்.எல்.ஏ உதயசிறி தெரிவித்துள்ளார்.
தேசிய சம்பள கொள்கைகளை மீறி சட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஏனைய அரச நிறைவேற்றாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்தை தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.