அரச கணக்குக் குழுவின் அறிக்கைகள் குறித்த விசேட முழுநாள் விவாதமொன்று இன்று (19) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட அரச கணக்குக் குழுவின் அறிக்கையே இவ்வாறு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சபை ஒத்திவைப்புப் பிரேரணையாக இது ஜே.வி.பியினால் முன்வைக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் 6.30 மணிவரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

