அரசு நிறுவனங்களில் ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் நிரந்தர நியமனங்கள் இல்லாமல் தற்போது பணியாற்றி வரும் சுமார் 6,000 பேரை நிரந்தரமாக்குவது குறித்து பொதுவான முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று(03) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தரமான பொது சுகாதார சேவை
அத்துடன், அந்த நிகழ்வில் நுளம்பு கட்டுப்பாட்டு உதவியாளர் பதவிக்கு 640 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த நாட்டு மக்களுக்கு மிக உயர்ந்த தரமான பொது சுகாதார சேவைகளை வழங்குவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதன்போது வலியுறுத்தியுள்ளார்.