Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்

September 12, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! – அரசாங்கம் அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களின் ரூ.25,000 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் 24% ஆகக் குறைந்த அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு உரித்துடையவர்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

2024 மே 27ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2024/20 தீர்மானத்தின் அடிப்படையில் பல வருடங்களாக நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் பின்னர், அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை 2024 ஆகஸ்ட் 12 ஆம் திகதி மீண்டும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள அதிகரிப்பு நிச்சயம்

அதன் பரிந்துரைகளின்படி, வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25,000 ரூபாயாக உயர்த்துதல், அடிப்படைச் சம்பளத்தை குறைந்தபட்சமாக 24% ஆக உயர்த்துதல், மருத்துவக் காப்புறுதி முறையை அறிமுகப்படுத்துதல்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம் | Salary Allowance Increment Of Government Employees

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் பாதிக்கு சமமான வாழ்வாதாரக் கொடுப்பனவை வழங்குதல். செப்டம்பர் 4, 2024 அன்று, மேற்படி ஆணைக்குழுவின் முழு அறிக்கையும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, அதன்படி 08 அம்சங்களில் கொள்கை உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரவு செலவுத் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் கலந்து கொண்டதுடன், பண ஒதுக்கீடு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, இந்த சம்பள அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Previous Post

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64 போட்டி நிகழ்வுகளில் 350 போட்டியாளர்கள் பங்கேற்பு

Next Post

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் மேலும் இருவருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யப்படுமா? – ஒக்டோபர் 7 ஆம் திகதி தீர்மானம் எட்டப்படும்

Next Post
பயங்கரவாதிகளை விடுவிக்க முடியாது! | பிரசன்ன ரணதுங்க

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் மேலும் இருவருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யப்படுமா? - ஒக்டோபர் 7 ஆம் திகதி தீர்மானம் எட்டப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures