Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசக்கு ரணில் விடுத்த சவால்

October 24, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (23) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்குள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க வருவாய்

தொடர்ந்தும் அவர் அங்கு தெரிவித்ததாவது, “அரச ஊழியர் சம்பள உயர்வை வழங்க வேண்டும், அந்த சம்பள உயர்வை கொடுக்கலாம், உரிய பரிசீலனைக்கு பிறகே இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்த்தோம்.

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசக்கு ரணில் விடுத்த சவால் | Salary Increase Of Govt Employees Ranil S Demand

அடுத்த ஆண்டுக்குள் நமது அரசாங்க வருவாய் பன்னிரெண்டு சதவீதத்தில் இருந்து பதின் மூன்று சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும், அதன்படி இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்.

உரிய சம்பள உயர்வை வழங்க பணம் உள்ளது, பணம் இல்லை என்று சொன்னால் அது ஒரு விசித்திரக் கதை. சம்பள உயர்வுக்கு எங்கிருந்து பணம் வரும் என்பதை அரசு விளக்க வேண்டும்.

திசைகாட்டி கொடுத்த வாக்குறுதி

இந்த சம்பள உயர்வை தள்ளிப் போடாதீர்கள், ஏனென்றால் மக்கள் வாழ முடியாது, திசைகாட்டி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

அரச ஊழியர்களின் சம்பளம்: அநுர அரசக்கு ரணில் விடுத்த சவால் | Salary Increase Of Govt Employees Ranil S Demand

இந்த அரசு ஊழியர் சம்பள உயர்வை ஜனவரி முதல் நடைமுறைபடுத்த வேண்டும். இந்த சம்பள உயர்வை டிசம்பரில் அல்லது ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் நிறைவேற்றி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனவரி இறுதியில் சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. இந்த சம்பள உயர்வை இப்போது தாமதப்படுத்த முயற்சிக்காதீர்கள்” என்றார்.

Previous Post

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் | அவுஸ்திரேலியா

Next Post

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

Next Post
இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures