ஹாங்காங் அரசுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள், மெட்ரோ ரயில்களை இயங்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாங்காங்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்க வகை செய்யும் மசோதவை எதிர்த்து ஹாங்காங் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.image
கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் மசோதா நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும், அரசின் தலைவர் கேரி லேம் (Carrie Lam) பதவி விலக வேண்டும் எனக் கோரி போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தி போராட்டம் நடைபெற்றது. ரயிலின் தானியங்கி கதவுகளை மறித்து நின்ற போராட்டக்காரர்கள் அவற்றை திறக்க விடாமலும், பயணிகளை ரயிலுக்குள் செல்ல விடாமலும் செய்தனர்.
சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே சிறு மோதல்களும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.