முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச மீண்டும் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கயை கொழும்பு 2 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சஜித்திற்கு நெருக்கமானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது எதிர்கட்சி தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், நாளை முதல், நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதுடன், மக்களை சந்தித்து பேச சஜித் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மிக முக்கிய கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

