Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை

February 23, 2019
in News, Politics, World
0

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தலைவர் கலைஞர் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் கொண்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கலைஞர் மறைவு குறித்த செய்தி கேட்டு, வெளிநாட்டில் இருந்தபடி கண்ணீர் விட்டு அழுதது மறக்க முடியாது. என்னை எப்போதும் அண்ணன் என்று தான் அழைப்பார்.

இன்று அரசியல் பேசுவதற்காக அவரை சந்திக்கவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உடல் நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன்.

தற்போது அமெரிக்காவில் அவர் சிகிச்சை முடிந்து நல்ல முறையில் தேறி வந்திருக்கிறார். அவர் இன்னும் நல்லமுறையில் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘உங்கள் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

Previous Post

உமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு பணிப்புரை

Next Post

சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் .யோகி

Next Post

சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் .யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures