அரசியலமைப்புத் திருத்தமொன்று நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு அவசியம் என்பதே எனது நிலைப்பாடு என மல்வத்து பீட மகாநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சிம்மாசன உரையிலும் இதுபற்றி கூறியிருந்ததாகவும் மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையில் தெளிவாக எடுத்துக் கூறியதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு எதிர்க் கட்சியினர் தனது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தேரர் ஊடகங்களிடம் மேலும் கேட்டுள்ளார்.

