Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசாங்க தகவல் திணைக்களம் சரியாகவே இயங்குகிறது ; நாலக கலுவெவ

November 1, 2020
in News, Politics, World
0

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கடமைகள் எந்தவித தடைகளுமின்றி இடம்பெற்றுவருவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

இந்த சந்தர்ப்பத்தில் சில தரப்பினரினால் அரசாங்க தகவல் திணைக்களம் தொடர்பில் பல்வேறு குறுகிய நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூகமயப்படுத்திவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால், கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக திணைக்கள வளாகத்திற்குள் மேற்கொள்ளக்கூடிய ஆகக் கூடிய சுகாதார பாதுகாப்பு மூலோபாயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் சமீபத்தில் பேலியகொடை மீன் சந்தைக்கு விஜயம் செய்ததன் காரணமாக இந்த ஊழியர் தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து அந்த ஊழியருடன் தொடர்புபட்டதாக அடையாளம் காணப்பட்ட அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுவரையிலும் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் அத்தியாவசிய ஆகக் குறைந்த பணியாளர்கள் குழுவினர் மாத்திரமாவதுடன் இவர்களுக்கான அனைத்து சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் ஊடகவியலாளர்கள் அடிக்கடி வருகை தரும் நிறுவனம் என்ற ரீதியில் ஊடகவியலாளர்களின் சுகாதார பாதுகாப்பை கவனத்திற்கொண்டு கடந்த சுமார் இரண்டு வாரம் தொடக்கம் இவர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அழைக்கப்படவில்லை. இதன் போது, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடவியலாளர்களுடனான கலந்துரையாடல்கள் கூட இணையவழி ழுடெiநெ முறையில் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதற்கமைவாக இணைய வழி உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மூலோபாயங்களை ஆகக் கூடிய வகையில் பயன்படுத்தி செயற்படும் நிறுவனம் என்ற ரீதியில் திணைக்கள பணியாளர் சபை ஊழியர்களை கடமைக்காக அழைப்பது ஆகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்ற நிலைமையிலும் கூட தனது கடமைகளை முழுமையான வகையில் நிறைவேற்றக் கூடிய ஆற்றல் அரசாங்க தகவல் திணைக்களம் கொண்டுள்ளது.

இந்த நிலைமையின் அடிப்படையில் அரசாங்க தகவல் திணைக்களம் தனது அத்தியாவசிய மற்றும் நாளந்த கடமைகளை எந்தவித தடையுமின்றி நடைமுறைப்படுத்துவதையும், சில தரப்பினரால் சமூகமயப்படுத்தப்படும் அடிப்படையற்ற விளம்பரத்தில் எந்தவித உண்மையும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்..

அரச தகவல் திணைக்களத்தின் பங்களிப்பு மற்றும் தலையீடு அரச உத்தியோகபூர்வ தொடர்பாடல் பணிகளுக்கு அத்தியாவசியமான, கொவிட் 19 வைரசு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தற்போதைய சூழ்நிலைமையின் கீழ் கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களினதும், அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜயவீர அவர்களினதும் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் திணைக்களத்தின் பணிகள் எந்தவித தடையுமின்றி, மிகவும் அர்ப்பணிப்புடனும் தொடர்ச்சியாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்

Previous Post

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா

Next Post

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 153 பேர் கைது

Next Post

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 153 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures