அரசாங்கம் 2019 வரவு – செலவு திட்ட முன்மொழிவு மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு போதுமான நிதி திறைசேரியில் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் மும்மொழியப்பட்டுள்ள 2019 வரவு – செலவுத் திட்டத்தில் அதிகமாக பொய்களே உள்ளது என்பது ஜனாதிபதியின் ஒரு சமீபத்திய அறிக்கை மூலம் தெளிவாகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு இது ஒரு தேர்தல் ஆண்டு என்பதால், அரசாங்கம் ஒரு பெரிய முன்மொழிவை முன்வைத்து அனைத்தையும் பெற்றுத்தருவதாக சத்தியம் செய்வார்கள் என்றும் இதனால் மக்களே ஏமாற்றமடையப்போகின்றனர் என கூறினார்.
அத்தகைய சூழ்நிலைகளில் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு தொடர்ந்தும் தனது ஆட்சியை கொண்டு செல்லும் என்பது கேள்விக்குறியே என ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்

