Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்தின் தேவைக்காக லசாவின் படுகொலை! நாமல் பகிரங்கம்

October 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதாக காவல்துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறிவித்த நிலையில் வெலிகம பிரதேச சபை தலைவரின் துப்பாக்கிச் சூடு அரசாங்கத்தின் தேவைக்காகவே நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குறிப்பாக, நகர சபைகளின் மேயர்கள், நகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு தேவை

சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் தனக்கு பாதுகாப்பு தேவை என்று காவல்துறை மா அதிபரிடம் தெரிவித்திருந்தார், ஆனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

அரசாங்கத்தின் தேவைக்காக லசாவின் படுகொலை! நாமல் பகிரங்கம் | Weligama Lasa Dead Namal Expresses Doubt

ஒருவர் இறந்த பிறகு, அவரது கடந்த கால செயல்களைக் குறிப்பிட்டு கொலையை மறைக்க, காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து நான் மிகவும் கவலைப்பட்டேன்.

வெலிகமத் தலைவர் அப்போது தனது பாதுகாப்புக்காக முன்வைத்திருந்த கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால், அவர் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்.

அரசாங்கத்திடம் கோரிக்கை

ஏதாவது நடக்கும் முன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது பொருத்தமானது என்பதை நான் அரசாங்கத்திற்கு நினைவூட்டுகிறேன். எனவே, பொது பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.

அரசாங்கத்தின் தேவைக்காக லசாவின் படுகொலை! நாமல் பகிரங்கம் | Weligama Lasa Dead Namal Expresses Doubt

தினந்தினம் நடக்கும் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதாக காவல்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறியிருந்தாலும், இந்த துப்பாக்கிச் சூடு அரசாங்கத்தின் தேவைக்காகவே நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது.” என அவர் மேலும்ட கூறியுள்ளார். 

Previous Post

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த ‘பைசன் காளமாடன்’ படக் குழு

Next Post

வடக்கில் GovPay வழியாக போக்குவரத்துக்கான அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

Next Post
வடக்கில் GovPay வழியாக போக்குவரத்துக்கான அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

வடக்கில் GovPay வழியாக போக்குவரத்துக்கான அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures