புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன. வெகு விரைவில் அரசமைப்பு உருவாக்கம் தொடர்பிலான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பிரதமராக இருந்த சந்தர்ப்பத்தில்அரசமைப்புக்கான வரைபு உருவாக்கப்பட்டது. அவரே அதன் ஆசிரியர். அதில் தமிழ்க் கட்சிகள் பங்கேற்கவில்லை. ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசமை்பு உருவாக்கத்திலும் தமிழ்க் கட்சிகள் பங்கேற்கவில்லை. முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் அரமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.