அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரச தலைவரால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு சார்பில் விவசாயப் பிரதி அமைச்சர் இ.அங்கஜன், கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் வியா ழேந்திரன் மற்றும் மீள்குடியேற்ற பிரதிய மைச்சர் மஸ்தான் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச, நீதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பு கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது என்று அங்கஜனின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை காலமும் வழக்குப் பதிவு செய்யப்படாமல் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பில் மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொறிமுறைகள் மற்றும் ஆரம்ப நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.