அயர்லாந்திலுள்ள டப்லின் நகருக்கு அருகிலுள்ள கடற்கரையில் கூடிய பெண்கள் சிலர் உலக சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நிருவாணமாக குளிரான நீரில் கூடுதலான நேரம் இருந்தே இவர்கள் இந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.
இவர்கள் கடல் நீரில் தங்கியிருந்த போது அதன் வெப்பநிலை 12 பாகை செல்சியசாக இருந்துள்ளது. உலகிலுள்ள 2505 பெண்கள் சேர்ந்து இவ்வாறு நிலைநாட்டிய சாதனையினால், கடந்த 2015 ஆம் ஆண்டு 786 பெண்களினால் அவுஸ்திரேலியாவில் நிலைநாட்டப்பட்ட இதேபோன்றதொரு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகிலுள்ள புற்றுநோயுற்றவர்களுக்கு நிதியுதவியைத் திரட்டும் நோக்கில் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேற்குலகு வெட்கத்தை இழந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என்று பலரது சிந்தனையிலும் கருத்து பிறக்கும் என்பது மட்டும் உறுதியானது