அம்பாறை- பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள 3 வெவ்வேறு பிரதேசத்தில் கஞ்சா மற்றும் ஹரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் இன்றையதினம் (07.04.2023) பதிவாகியுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொத்துவில் நகர பகுதியில் 26 வயதுடைய நபர் ஒருவரும் சியம்பலாண்டுவ பகுதியிச் சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்
இந்த கைது சம்பவத்தின்போது இருவரிடமும் மொத்தமாக 550 மில்லிக்கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை அறுகம்பை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து உல்லை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஹரோயின் போதை பொருளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.