சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேகத்தில் இங்கினியாகலை ஹிந்தகளுகம பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின்படி, இங்கினியாகலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிந்தகளுகம, பஹல லந்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அம்பாறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.