Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அம்­பாறை தாக்குதல் :பாராமுகமாய் இருத்த பொலிசாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் !

March 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

அம்­பாறை நக­ரில் பள்­ளி­வா­சல் மற்­றும் முஸ்­லிம் கடை­கள் மீது இன­வாத நோக்­கில் தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­கை­யில் அதைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­மல், பாரா­மு­கத்­தோடு நடந்­து­கொண்ட பொலி­ஸா­ருக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

இவ்­வாறு சட்­டம், ஒழுங்கு அமைச்­ச­ரான தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து நேற்­று­முன்­தி­னம் இரவு நாடு திரும்­பிய தலைமை அமைச்­சர் ரணில், அம்­பா­றைச் சம்­ப­வம் தொடர்­பில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்­கீம், ரிசாத் பதி­யு­தீன், கபீர் ஹாசிம் மற்­றும் பொலிஸ்மா அதி­ப­ரு­டன் அவ­சர சந்­திப்­பொன்றை நடத்­தி­னார். அதி­லேயே இவ்­வாறு கூறி­னார்.

பொலி­ஸா­ரின் முன்­னி­லை­யி­லேயே சம்­ப­வம் நடை­பெற்­றமை, சாதா­ரண சட்­டத்­தின் கீழ் சில­ரைக் கைது செய்­தமை, கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­க­ளுக்­குப் பிணை வழங்­கு­வ­தற்கு பொலி­ஸார் உடந்­தை­யாக இருந்­தமை, பள்­ளி­வா­சல் தாக்­கு­தல் தொடர்­பில் எந்­த­வொரு சந்­தேக நபர்­க­ளை­யும் கைது செய்­யாமை, சூத்­தி­ர­தா­ரி­கள் கைது செய்­யப்­ப­டு­வ­தைத் தடுப்­ப­தற்­கான முஸ்­தீ­பு­களை பொலி­ஸார் மேற்­கொண்­டமை என்று சட்­டத்­தைப் பாது­காக்க வேண்­டிய பொலி­ஸாரே இந்­தச் சம்­ப­வத்­தின்­போது சட்­டத்தை மீறி பார­பட்­ச­மாக நடந்­துக்­கொண்­டமை குறித்து மேற்­படி அமைச்­சர்­கள் கடுந்­தொ­னி­யில் தலைமை அமைச்­ச­ரி­டம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இந்த நிலமை தொடர்ந்­தால் சட்­டம் மற்­றும் ஒழுங்கு அமைச்­சா­னது நாட்­டில் கேலிக்­கூத்­தாகி விடும் என்­றும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர். பொலி­ஸார் மீது சிறு­பான்­மைச் சமூ­கம் தற்­போது நம்­பிக்கை இழந்து வரு­கின்­றது. இது நல்­லாட்­சிக்கு உகந்­த­தல்ல என­வும் அவர்­கள் தலைமை அமைச்­ச­ரி­டம் கூறிப்­பட்­டது.

இது தொடர்­பில் பார­பட்­ச­மாக நடந்­து­கொண்ட பொலி­ஸார் தொடர்­பில் பிர­திப் பொலிஸ்மா அதி­பர் தலை­மை­யில் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் என்று உறு­தி­ய­ளித்த தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக துரி­த­க­தி­யில் உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும் என்­றும், இனி­மேல் இவ்­வா­றான இன முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தும் சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட திட்­டங்­கள் நடை­மு­றைக்கு வரும் என்­றும் அமைச்­சர்­க­ளி­டத்­தில் உறு­தி­ய­ளித்­தார்.

Previous Post

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு கட்­டாய இட­மாற்­றங்­கள்

Next Post

வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களுக்கு படையணி

Next Post

வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களுக்கு படையணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures