நீர் வழங்கல் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் முன்னதாக அமைச்சுப் பணிகளை புறக்கணித்தார்.
எனினும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]