Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாணவர் அழைப்பு

March 11, 2020
in News, Politics, World
0
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாணவர் அழைப்பு

மாணவர் சமூகத்தினரும் பிரதேச நன்மையை கருத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூகத்திற்கு முன்மாதியாக விளக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வவுனியா வளாகத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் குறைபாடுகளை நீக்குவதற்கும் தன்னாலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதற்கும் உறுதியளித்தார்.

வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் வவுனியா வளாகத்தினை சேர்ந்த அதிகாரிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று(செவ்வாய்கிழமை) சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போதே மேற்குறிப்பிட்ட கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்வின்றி தொடருவதற்கு தவறானவர்களின் கைகளில் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டமையே காரணம் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், நிரந்தர கட்டடித்தினை அமைப்பதற்கு குறைந்தது ஒரு வருடங்களேனும் பொறுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன், மின்சார இணைப்பு மற்றும் கற்றல் உபகரணங்கள் தொடர்பாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயங்களை பட்டியலிட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி பெற்றுத் தருவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

Previous Post

கொரோனாவை ஒழிக்க ஒத்துழைக்குமாறு இலங்கையில் அரசாங்கம் கோரிக்கை

Next Post

த.ம.தே கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு!

Next Post
த.ம.தே கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு!

த.ம.தே கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures