Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமைச்சர் சந்திரசேகரன் குழுவின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலம்

April 18, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அமைச்சர் சந்திரசேகரன் குழுவின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலம்

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனின் (Ramalingam Chandrasekar)  குழு யாழ்ப்பாணத்தில் செய்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றன.

அச்சுறுத்தும் அரசியல் 

குறிப்பாக தன்னுடைய அரசின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் வந்தால் தான் அவிருத்திக்கானான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மிரட்டலாக கூறுகின்றார்.

இது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் கலாசாரத்தை காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது மக்களையும் தனித்துவமான சபைகளினதும் அதிகாரங்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது. இவ்வாறு சிறுமைத்தனமாக ஜனாதிபதி செயற்படுவது வெட்கக் கேடானது.

அமைச்சர் சந்திரசேகரன் குழுவின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலம் | Former Speaker Warns Ramalingam Chandrasekaran

உள்ளூராட்சி மன்றங்கள் அரசின் எடுபிடிகள் அல்ல. அவை உள்ளூர் வளங்களை கொண்டு மக்கள் தமது பிரதேசத்தின் ஆளுகையை முன்னெடுக்கும் ஒரு அபிவிருத்திக்கான அரசியல் கட்டமைப்பு.

மக்களிடம் பெறும் சோலை வரியாலும், முத்திரை தீர்வை வரியாலும், நீதிமன்ற குற்ற தண்டப் பணங்கள், சந்தை குத்தகைகளூடாக கிடைக்கும் வருமானங்கள் கடைத் தொகுதிகளின் வரிகளூடாக கிடைக்கும் பெரு நிதிகளே சபைகளின் நிதி பெறும் வழிகளாக இருக்கின்றன.

உள்ளூராட்சி மன்றங்கள்

அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் தத்தமது வழங்களை கொண்டுதான் நிதியை ஈட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனரே தவிர மத்திய அரசின் தயவில் உள்ளூராட்சி மன்றங்களும் செயற்படவில்லை என்பதை அநுரவும், அவருடைய நாடளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு உள்ளூர் அதிகார சபையின் ஆளுகைக்குள்ளேயே அப்பிரதேசத்தின் அனைத்து செயற்றிட்டங்களும் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டது.

அமைச்சர் சந்திரசேகரன் குழுவின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலம் | Former Speaker Warns Ramalingam Chandrasekaran

உள்ளூராட்சி மன்றங்கள் தனித்துவம் கொண்டவை. சபைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறிய அரசாங்கம். அதன் தவிசாளருக்கு அப்பிரதேச சபையின் உச்ச அதிகாரம் இருக்கின்றது. இதில் மக்கள் தெளிவுற வேண்டும்.

மேலும் சமூக நலன்புரி திட்டங்களை வழங்குவதாக கூறி சர்வதேச நடுகளிடம் இருந்து வரும் பல நூறு மில்லியன்களை பெற்று வெளிவிவகார அமைச்சு என்ற போர்வையில் அதனூடாக கையாண்டு சபைகளுக்கு நிதிகளை விடுவிக்கும் முறையை கையாண்டு வருகின்றன.

அநுர அரசு

அதன்படி, தற்போது கிடைக்கும் நிதியை மத்திக்கு கையகப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

இதேவேளை பல பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அநுர அரசு, அதில் தோல்விகண்டு இயலாமல் போனதால் இப்போது அச்சுறுத்தும் செயற்பாடாக தன்னை முன்னெடுக்க முயல்கின்றது.

அமைச்சர் சந்திரசேகரன் குழுவின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலம் | Former Speaker Warns Ramalingam Chandrasekaran

அதிமட்டுமல்லாது சந்திரசேகரன் குழுவினர் பலூன் ஊதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு பிள்ளைகள். இந்த பால்குடிகள் ராஜபக்சர்கள் கூட செய்யாத அடக்கு முறைகளையும், அநியாயங்களையும் அட்டூழியங்களையும் செய்கின்றனர்.

சந்திரசேகரனின் குழு

எனவே மக்கள் இதில் தெளிவாக இருப்பது அவசியம். அதுமட்டுமல்லது தமிழ் மக்களின் பிரதேசங்களில் காலூன்றினால் அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பையும் இல்லாது செய்துவிடும்.

அமைச்சர் சந்திரசேகரன் குழுவின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலம் | Former Speaker Warns Ramalingam Chandrasekaran

தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகரன் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள்.

அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் வெளியாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகள் – கஜிந்தன்

Previous Post

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அநுர விளக்கம்

Next Post

பிள்ளையான் விவகாரத்தில் அநுர அரசின் நோக்கம் இதுதான்..! போட்டுடைத்த எம்.பி

Next Post
பிரபாகரனும் பொட்டு அம்மானும் மரணிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு! | பிள்ளையான்

பிள்ளையான் விவகாரத்தில் அநுர அரசின் நோக்கம் இதுதான்..! போட்டுடைத்த எம்.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures