Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர்கள் இராஜினாமாச் செய்வார்களா…????

July 25, 2017
in News
0
அமைச்சர்கள் இராஜினாமாச் செய்வார்களா…????

ஏதாவது ஓர் அரச வங்கிக்குள் கைவிடப்பட்ட நிலையில் கள்ள நோட்டுகள் கொண்ட ஒரு பையோ, பார்சலோ கண்டுபிடிக்கப்பட்டால் வங்கிகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர மீது பழி போட்டு, அவரை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யும்படிக் கேட்பது எவ்வளவு முட்டாள்தனமோ- எங்கேயாவது ஒரு வீதியோர வாய்க்காலுக்குள் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட ஒரு மனித சடலம் காணப்பட்டால் வாய்க்காலுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ரவூப் ஹக்கீமின் மீது பழி சுமத்தி அவரைக் கைது செய்ய வேண்டுமென்றும் பதவியிலிருந்து அவர் வெளியேற்றப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுப்பது எத்துணை பைத்தியக்காரத்தனமோ- போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு பஸ்ஸில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டால் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் மீது குற்றம் சுமத்தி அவரது அமைச்சுப் பதவியைப் பிரித்தெடுக்க வேண்டுமென்று சொல்வது எவ்விதம் மடத்தனமோ- அந்தளவுக்கு முட்டாள்தனமானதும், பைத்தியக்காரத்தனமானதும், மடத்தனமானதுமான செயல்தான் ச.தொ.ச.வாகனமொன்றில் போதைப்பொருள் இருந்த விவகாரத்தில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது விரல் சுட்டுவதும் அவரைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதும்.

இந்த விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணையகமும் மற்றும் CaFFE அமைப்பும் விழுந்தடித்துக் கொண்டு அமைச்சர் ரிசாத் பதியுதீனை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்கி வைத்துத்தான் விசாரணைகள் நடைபெற வேண்டுமென்ற வகையில் கூறியிருப்பது நகைப்புக்குரிய விடயமாகும். கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் நடைபெறுகின்ற ஆயிரத்தெட்டு மனித உரிமைகளை உரிய முறையில் கண்டிக்க முடியாத இந்த அமைப்புகள் ஏன் இவ்வளவு அவசரமாக அதுவும் நடைமுறைக்கும் யதார்த்தத்திற்கு பொருந்தாத அறிக்கையினை வெளியிட வேண்டும் என்பது யோசிக்க வேண்டிய விடயமாகும்.

இது போதாதென்று, அமைச்சர் ரிசாத் மீது புழுக்கமும் பொறாமையும் கொண்ட சில வஞ்சக ‘அரைகுறைகள்’ தங்கள் முகநூல் பக்கங்களில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ‘வாந்தி’ எடுத்து வைத்திருப்பதைப் பார்க்கையில் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

காழ்ப்புணர்வின் உச்சம் எப்படி இருக்க வேண்டுமென யாரும் பார்க்க விரும்பினால், அவர்கள் ‘ஒன்றுக்கும் உதவாத’, மூளைக்கும் வேலைக்கும் சம்பந்தமேயில்லாமல் எழுதித் தள்ளும் இந்தப் பிரகிருதிகளின் சில பதிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம். சும்மா வாயைச் சப்பிக் கொண்டிருந்தவனுக்கு சுயிங்கம் கிடைத்த கதைதான் போங்கள்…அமைச்சர் ரிசாதைப் பழி சொல்லித் தமது தலைவனுக்குப் பன்னீர்க் குளியல் நடத்துகிறார்களாம் பல முண்டங்கள்.

உண்மையிலேயே இத்தகைய மோசமான ‘இரண்டும் கெட்டான்கள்’தான் அவ்வப்போது பொது பல சேனாவுக்கும் மற்றும் தமிழ், சிங்கள இனவாத சக்திகளுக்கும் போட்டுக் கொடுப்பவர்கள் என்பதை நமது சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று அமைச்சர் ரிசாத் நடாத்திய ஊடக மாநாட்டில் என்ன நடந்தது என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். தன் மீது அபாண்டம் சுமத்திய ஆனந்த சாகர தேரர் மீது வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

மடியில் கனமிருந்தால்தானே பயப்பட வேண்டும்…? அமைச்சர் ரிசாத்தின் இந்தத் துணிச்சல் ஒன்றே அவர் மீது துளியளவு களங்கமும் கிடையாது என்று நிரூபிக்கப் போதுமானதன்றோ! இவை அத்தனைக்கும் மேலாக அல்லாஹ் மிகப் பெரியவன்.

அவன் சதிகாரர்களுக்கெல்லாம் மிகப் பெரும் சதிகாரன். குற்றமற்ற ஒருவர் மீது அபாண்டங்களை அள்ளி வீசிச் சதி செய்யும் கூட்டத்திற்கு இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் மிகக் கடுமையான தண்டனைகளை அவன் வழங்கியே தீருவான். இன்ஷா அல்லாஹ்!

 

Previous Post

புலிகளின் ஆரம்பகாலத்தை ஞாகபமூட்டி, மஹிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post

500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி, அர்ஜுன ரணதுங்க வழக்குத் தாக்கல்

Next Post
500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி, அர்ஜுன ரணதுங்க வழக்குத் தாக்கல்

500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி, அர்ஜுன ரணதுங்க வழக்குத் தாக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures