பாராளுமன்றத்திலுள்ள எம்.பிக்கள் எவருடையவும் சம்பளத்தில் ஐந்து சதத்தை கூட அதிகரிக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்தத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுத்தாலும், இறுதியாக அது அமைச்சரவையில் வந்ததன் பின்னரேயே அமுலுக்கு வரவேண்டும். அதற்கு நான் அமைச்சரவையில் இடமளிக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் கூறினார்.
நேற்றைய தினம் பத்திரிகையில் பெயர் குறிப்பிடப்படாத நிலையில் எம்.பி.க்களதும் அமைச்சர்களதும் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான செய்தி வெளியாகியிருந்தது. இன்றைய பத்திரிகையில் பெயர்களுடன் அச்செய்தி வெளியாகியிருந்தது. எந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் யார் கூறினாலும், சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள இடமளிக்கவே மாட்டேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

