Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சரையும் அதிகாரிகளையும் அசரவைத்த 5 வயது சிறுவன்!

February 5, 2018
in News, Politics, World
0

தெலங்கானா அரசு, பண்டில்லாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவனைப் பாசனத் திட்டங்களுக்கான நியமனத் தூதராக நியமித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தெலங்கானாவில் ஷாபுர் நகரில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் பணிப்புரிந்துவரும் தொழிலாளியின் மகன் நேஹால். யு.கே.ஜி படித்துவரும் நேஹாலுக்கு அரசுத் திட்டங்கள் பற்றி அபார அறிவு இருந்துள்ளது. அவர் தன் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் விவசாயத்தைப் பற்றியும் நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றியும் ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வாராம். நீர்ப் பாசனத் திட்டங்கள் பற்றி நேஹாலுக்கு இருக்கும் புரிதல், பண்டில்லாபள்ளி கிராம மக்களை வியக்க வைத்தது. நேஹால் பற்றி தெலங்கானா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

A five-year old upper kindergarten (UKG) kid Nehal of Pandillapalli village in Chintakani block of Khammam district mesmerised irrigation experts and engineers by his 20-minute speech on irrigation projects in the state, the benefits from each of those projects. pic.twitter.com/eKCHCEyzMA
இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தின் ஜலசோத்ஷாவில் அமைச்சர் ஹரிஷ் ராவ், உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் முன்னிலையில் சிறுவன் நேஹால் நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றி விவரித்தார். சுமார் 20 நிமிடம் உரையாற்றிய சிறுவன் நேஹால் கிருஷ்ணா, கோதாவரி நதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள், மறுவடிவமைப்புக்கான அவசியம் என அனைத்துத் தகவல்களையும் விரிவாக விளக்கினார். நேஹால் பேசி முடித்ததும் அமைச்சர் ஹரிஷ் ராவும் அதிகாரிகளும் வாயடைத்துப் போனார்களாம். சிறுவனைக் கட்டியணைத்துக்கொண்ட அமைச்சர் ஹரிஷ், “இச்சிறுவனைத் தெலங்கானாவின் நீர்ப்பாசனத் திட்டங்களின் நியமனத் தூதராக (Brand ambassador) நியமிக்கிறேன்’ என்றார். மேலும் நேஹாலின் படிப்புச் செலவை நீர்ப்பாசனத்துறை ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

Previous Post

சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக்காக வவுனியாவில் ஜனாதிபதி

Next Post

கட்ட பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்டவிரோதம்

Next Post
கட்ட பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்டவிரோதம்

கட்ட பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்டவிரோதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures