Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

அமேசான் பிரைம் வீடியோவின் ‘மொடர்ன் லவ் சென்னை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

May 15, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அமேசான் பிரைம் வீடியோவின் ‘மொடர்ன் லவ் சென்னை’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மொடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் மே 18 ஆம் திகதியன்று வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஆளுமைகளான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இதனை இயக்கியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்த ‘மொடர்ன் லவ்’ எனும் அசல் இணையத் தொடரின் தமிழாக்க திரைப்படத்தில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், அசோக் செல்வன், டி ஜே பானு, ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தரா, ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன்,  கிஷோர் ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, வாமிகா மற்றும் பிபி  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

அமேசான் ஒரிஜினல் தொடர் ‘மொடர்ன் லவ் சென்னை’, மே 18 ஆம் திகதி முதல்  240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது  இந்நிலையில் சென்னையில் இதன் முனனோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.

இதில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் அமேசான் பிரைம் இந்திய பிரிவின் தலைவரான சுஸாந்த் ஸ்ரீராம் உள்ளிட்ட அமேசான் பிரைம் வீடியோவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதன் போது படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜா ‘மொடர்ன் லவ் சென்னை’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜா பேசுகையில், “இந்த ஆந்தாலஜி பாணியிலான படைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளார்ந்த  அனுபவமாக இருந்தது. தொடக்கத்தில் எட்டு மாத கால அவகாசத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். ஆனால் இரண்டரை ஆண்டுகளாகிவிட்டது.

இதில் பங்கேற்ற அனைவருக்கும் மறக்க இயலாத அனுபவமாக மாறியது. இருப்பினும் இந்த படைப்பு சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது.

நியூயோர்க் டைம்ஸ் எனும் நாளிதழில் ‘மொடர்ன் லவ்’ எனும் தலைப்பில், அதன் வாசகர்கள் தங்களது அனுபவத்தை கட்டுரை வடிவில் பகிர்ந்து கொண்டனர். அந்தக் கட்டுரை ஆயிர கணக்கை கடந்த பிறகு, இதனை ஒரு நிகழ்ச்சியாக ஏன் உருவாக்கக் கூடாது என ஒருவர் சிந்தித்தார்.

அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக முதல் சீசன் வெளியானது. இதில் எட்டு கதைகளை தெரிவு செய்து, ஆங்கில மொழியில் ஒளிபரப்பானது.

இதன் வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது சீசனை ஆங்கில மொழியை கடந்து, சர்வதேச அளவில் உருவாக்க வேண்டும் என்றும், அதனை இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று இந்திய மொழிகளில் உருவாக்க வேண்டும் என்றும் திட்டமிடுகிறார்கள்.

இந்தியிலும், தெலுங்கிலும், ‘மொடர்ன் லவ் மும்பை’, ‘மொடர்ன் லவ் ஹைதராபாத்’ எனும் பெயரில் வெளியாகி வெற்றியைப் பெற்றிருக்கிறது. தற்போது தமிழில், ‘மொடர்ன் லவ் சென்னை’ எனும் பெயரில் தயாராகி இருக்கிறது.

தமிழில் இடம் பெற்றிருக்கும் ஆறு கதைகளும் ஏற்கனவே வெளியான கதைகள் அல்ல. அந்த நாளிதழில் வெளியான மொடர்ன் லவ் குறித்த கட்டுரைகளை எங்கள் குழு பரிசிலித்து, அதில் சிறந்தவற்றை தெரிவு செய்து, விவாதித்து, தமிழ் சூழலுக்கும், சென்னை மண்ணின் மக்களுக்கான கதையாகவும் மாற்றி உருவாக்கியிருக்கிறோம்.

சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறுவது போல் இந்த ஆறு கதைகளையும் எழுதி இருக்கிறோம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை முறை என பிரித்து இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறோம்.

காதலில் பரிசோதனை முயற்சிகளில் எதிலும் ஈடுபடாமல், வழக்கமான கதை களத்திலேயே கதாபாத்திரங்களின் மூலம், எல்லைகளை விரிவுபடுத்தி, சுவாரசியமாக புதுமையான கோணங்களில் சொல்ல இயலுமோ.. அதனை காட்சிப்படுத்தி இருக்கிறோம். இந்த திரைப்படத்தில் டைட்டில் பாடலுக்காக யுவனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.” என்றார்.

அமேசான் பிரைம் ஒரிஜினல்ஸ் இந்திய பிரிவின் தலைவரான சுஸாந்த் ஸ்ரீராம் பேசுகையில், “படைப்பு உருவாக்க ஒருங்கிணைப்பாளரான தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து  பணியாற்றுவது மறக்க இயலாத அனுபவம்.

எங்களுடைய அசலான இணைய தொடர்களுக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் இந்த தருணத்தில் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு தமிழ் திரையுலகில் ஏராளமான திறமை மிக்க கதை சொல்லிகள் இருக்கிறார்கள்.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான அசல் தமிழ் இணையத்தொடர்கள், உலக அளவில் வேறு எந்த மொழியிலும் வெற்றி பெறாத அளவிற்கு மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது. மீண்டும் அது போன்றதொரு சாதனையை சாத்தியப்படுத்தி இருக்கும் தியாகராஜன் குமாரராஜா மற்றும் அவருடைய குழுவினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ‘மாடர்ன் லவ் சென்னை’ தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறோம்.

தேசிய விருது பெற்ற படைப்பாளிகளுடன் இணைந்து உருவாகி இருக்கும் ‘மொடர்ன் லவ் சென்னை’, மே 18ஆம் திகதி முதல் உலகில் உள்ள நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாநகரங்களிலும், 210க்கும் மேற்பட்ட நாடுகளிலும் இந்த ஆந்தாலஜி திரைப்படம் வெளியாகிறது. இதன் மூலம் மொடர்ன் லவ் என சர்வதேச அளவில் பிரபலமான இணைய தொடர், இந்தி, தெலுங்கு ஆகிய மொழியினை தொடர்ந்து தமிழிலும் தயாராகி இருக்கிறது.” என்றார்.

Previous Post

உலக கலவை குத்துச்சண்டை போட்டியில் 5 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று இலங்கை சாதனை

Next Post

பிரபல வைத்தியர் சிவகுமாரன் மரணம்

Next Post
பிரபல வைத்தியர் சிவகுமாரன் மரணம்

பிரபல வைத்தியர் சிவகுமாரன் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures