அமெரிக்க தலைவர்களை முட்டாள்களாக நினைத்து பாகிஸ்தான் பொய்களை அள்ளி வீசியுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்களுக்கும் மேல் நிதியுதவி அளித்துள்ளோம். இதனை நினைக்கும் போது முட்டாள்தனமாக உள்ளது. பாகிஸ்தான் வஞ்சக எண்ணம் கொண்டது. அது பொய்களை தவிர வேறு எதையும் தந்ததில்லை. அமெரிக்க தலைவர்களை முட்டாள்களாக நினைத்து பாகிஸ்தான் பொய்களை அள்ளி வீசியுள்ளது.
நாங்கள் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை தேடி வருகிறோம். ஆனால் ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாக்., திகழ்கிறது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.