கடுமையான காற்றுடன் கூடிய அடை மழையினால் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் இயல்பு நிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காற்று வேகமாக வீசி வருவதனால் பல பிரதேசங்களில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வெள்ள அபாயம் ஏற்படுமானால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக டெக்ஸாஸ் மாகாண ஆளுனர் அறிவித்துள்ளார்.
அம்மாநாட்டிலுள்ள சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சுமார் 4500 பேரை கிழக்குப் பிராந்தியத்திலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கையும் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.