ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவப் படைத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல் குறித்த அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 11.00 மணிக்கு வெள்ளை மாளிகையில் வெளியிடவுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, ஈரான் ஒரே இரவில் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா பதிலடி கொடுப்பது தற்போதைக்கு அவசியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கட்சியைச் சேர்ந்த செனட்டரான லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

