அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதிப் போட்டியில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
நியூயார்க் நகரில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டியில் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திலுள்ள ரபேல் நடால் 28-ம் இடத்திலுள்ள தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
கெவின் ஆண்டர்சனை 6-3,6-3,6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை நடால் தனதாக்கினார்.
இது நடால் வெல்லும் 16-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
வெற்றி பெற்றது குறித்து நடால் கூறும்போதுl, “கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்ததில் தற்போது கிடைத்துள்ள வெற்றி உணர்ச்சிகரமானது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதலே நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். நியூயார்க்கில் வெற்றி பெறுவது என்பது புதுவித உற்சாகத்தை தரும். காரணம் இங்கு கூடியுள்ள ரசிகர்கள் கூட்டம். அவர்கள் எப்போதுமே என்னை சந்தோஷமாக உணர வைப்பார்கள்” என்றார்.












