Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்க எல்லையில் கைவிடப்பட்ட 1800 குடும்பங்கள்!

June 11, 2018
in News, Politics, World
0

அதிகாரம் எங்கெல்லாம் நிறைந்திருக்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுவதும், அவர்களது நில உரிமை பரிக்கப்பட்டு துரத்தப்படுவதும் உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நடந்துவருகின்றன. மனிதர்கள் இணைந்து வாழத் தொடங்கிய காலத்திலேயே சட்டங்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. சமூகத்தில் அனைவருக்கும் வாய்ப்புகளும் உரிமைகளும் கிடைப்பதை உறுதிப்படுத்தும் அமைப்புதான் சட்டம். ஆனால், அது பல நேரங்களில் இதற்கு எதிராகவே இன்றைய ஆட்சியாளர்களால் செயல்படுத்தப்படுகிறது. சட்டத்தின் வடிவங்களில் பிரச்னையா… சட்டத்தை இயக்குவதில் பிரச்னையா என்ற விவாதம் சமூகத்தின் பல அடுக்குகளில் நடந்து கொண்டிருக்கும்போதே சமூகத்தின் ஒருசாரார், இங்கு காயப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் 1,800 குடும்பங்கள் அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் கேட்பாரற்று ஓடிக்கொண்டிருக்கின்றன.

அரசியல், நிர்வாகத்தின் அடிப்படையில் உலகை நிர்வகிக்க நாடுகள் தோன்றினாலும் புவியியல் அடிப்படையில் நாடுகள் வகைப்படுத்தப்பட்ட பின்பு, பிரச்னைகளின் வடிவம் மாறத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாட்டிலும் குடியுரிமைக்கான வரையறைகள், சட்டத்திட்டங்கள் அனைத்தும் சொந்த நாட்டு மக்களைக் காப்பதற்காகவே என்றாலும், பல்வேறு காரணங்களால் அவை வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து ஒரு நாட்டில் தங்கிப் பிழைப்போர்க்குப் பெரும் விலங்காய், துயராய் அமைந்துவிடுகிறது.

தி கார்டியன் கட்டுரையில் இருந்து…

கடந்த 16 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,800 குடும்பங்கள் அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் பிரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குடியுரிமைக்காக அல்லாடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள், தாம் அந்நிய நாட்டில் பிறந்த காரணத்தினாலேயே குடியுரிமை பெற்றுவிட, அவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அந்நியர்கள் ஆகிறார்கள். குழந்தைக்கு இருக்கும் குடியுரிமை பெற்றோருக்கு இல்லை என்பதால் குழந்தையையும், பெற்றோரையும் பிரிக்க முடியுமா?

தன் அடையாளத்தைக் குறிப்பிடாமல் இத்தகவலை ஊடகத்துக்குத் தெரிவித்த அரசு ஊழியர் ஒருவர், “கடந்த வாரங்களில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது என்றும், அரசின் வெளியுறவுக்கொள்கைகளில் நடந்த மாற்றங்களின் விளைவு இது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்க அரசின் சுங்கவரித் துறை மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், “மே மாதம் 6 மற்றும் 19- ம் தேதிகளில் மட்டும் 658 குழந்தைகள் 638 பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசின் அதிகாரபூர்வ கணக்கின்படி இதுவரை 2,400 பேர் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். முறையான அனுமதியின்றி குடியேறியிருக்கிறார்கள்; சொந்த நாட்டிலோ அல்லது இங்கேயோ குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்; குழந்தைகளின் பெற்றோர்களாக நடிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சமீபகாலங்களில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கோ குடியரசைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் ஏழு வயது மகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க மக்களின் சிவில் உரிமைகள் அமைப்பு, மகளுடன் சேரப் போராடும் தாயுடன் இணைந்து நிற்கிறது. அந்தக் குழந்தையின் தாய் இவர்தான் என்பதற்கான ஆவணங்களை, அரசு கேட்கிறது. அந்த ஆவணங்கள் பிரிக்கப்பட்ட யாருடைய கைகளிலும் இல்லை என்பதுதான் சிக்கல். மரபணுச் சோதனை செய்து உறவை நிரூபித்துக்காட்ட முடியுமென்றாலும் அதற்கு மாதக் கணக்கில் காலம் எடுத்துக்கொள்கிறது அரசு. அதுவரையில் குழந்தைகள் பெற்றவர்களைப் பிரிந்துதான் இருக்க வேண்டும். மகளை இழந்த அந்தத் தாய்க்காகவும், இன்னும் அதே நிலையில் தவிக்கும் அனைவருக்காகவும் குரல் கொடுக்கும் அந்த அமைப்பின் வழக்குரைஞர் லீ கெலர்ண்ட், “குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அல்ல இந்த நடவடிக்கைகள், அமெரிக்க எல்லைக்குள் மற்ற நாட்டவர்கள் நுழைவதைத் தடுப்பதற்காகவே” என்று கூறுகிறார்.

“குழந்தைகளைப் பகடைக் காய்களாக வைத்து மற்ற நாட்டினரை ஒடுக்க நினைக்கிறார் ட்ரம்ப்” என்று குற்றம்சாட்டுகிறார் இவர். இந்த நிலையில், சமீபத்தில் அரசு, குடியேறியவர்களின் குழந்தைகளைச் சட்டரீதியாகப் பிரிப்பதற்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அது எந்த வகையில் இந்தப் பிரிவுகளுக்கு மருந்திடப் போகிறது என்று தெரியவில்லை.

எல்லைகளும், குடியுரிமைப் பிரச்னைகளும் எல்லா நாடுகளிலும் சிக்கல்தான் என்றாலும் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபின் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் உருவான மாற்றம் அளவில்லாத காயங்களை உருவாக்கியிருக்கிறது. ட்ரம்ப், தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் “மறுபடியும் அமெரிக்காவை முதலிடத்தில் ஏற்றி வைப்பேன்” என்று கூறினார். அது என்னவோ!? முதலிடத்தை அடைய நினைக்கும் எல்லா நாடுகளும் பலகட்ட தவிப்புகளுக்குப் பிறகே மற்ற நாட்டினரைத் தன் குடிகளாக ஏற்றுக்கொள்கின்றன. முதலிடம் என்பது பல ஒதுக்குதல்களுக்குப் பிறகுதான் கிடைக்கும் விஷயமாகவே உள்ளது. புவிப்பரப்பில் மனிதநேயம் என்ற விஷயம் முற்றிலுமாக எல்லைகள் என்ற பெயரில் பிரிக்கப்படுகிறது. சர்வதேச சட்டங்கள் இதுபோன்ற குடிபெயர்ந்தவர்களுக்கு நிரந்தரத் தீர்வளிக்கவேண்டும். இல்லையென்றால், பக்கத்தில் இருக்கும் இலங்கை தொடங்கி மெக்சிகோ வரை எல்லா நாடுகளின் எல்லையிலும் பல குடும்பங்கள் ஆதரவற்றுத் தவிக்கும். மனம் மாறுவார்களா ஆட்சியாளர்கள்?

Previous Post

ஆப்கன் தற்கொலைப்படை தாக்குதல் : பலி 12

Next Post

அனுபமா பரமேஸ்வரன் ஆடை வடிவமைப்பின் அடடே பின்னணி

Next Post
அனுபமா பரமேஸ்வரன் ஆடை வடிவமைப்பின் அடடே பின்னணி

அனுபமா பரமேஸ்வரன் ஆடை வடிவமைப்பின் அடடே பின்னணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures