அமெரிக்க பொருளாதார அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தவிர்ந்து கொள்வதற்கு துருக்கி ஜனாதிபதி ரஸெப் தையிப் அர்துகான் தீர்மானித்துள்ளார்.
இந்தவகையில், அந்நாட்டிலிருந்து துருக்கிக்கு இறக்குமதி செய்யப்படும் இலத்திரனியல் பொருட்களைக் கொள்வனவு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இவ்வாறான பொருட்களைத் துருக்கியில் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி அர்துகான் கூறியுள்ளார்.
தமது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார யுத்தமொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி அர்துகான், இதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த பொருளாதார யுத்தம் ஆரம்பத்தில் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது, இப்போது பகிரங்கமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

