ஆப்பிள் தேடுதளமாக சிரி அமெரிக்க அதிபர் படத்துக்கு பதில் ஆண்குறி படத்தை காட்டியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
இணையத்தில் கூகுள் போல பல தளங்கள் உள்ளன. அவ்வகையில் ஆப்பிள் கம்பியூட்டர் மற்றும் ஐஃபோன்களுக்கு சிரி என்னும் தளம் உள்ளது. இதன் மூலம் பலர் கேள்விகளுக்கு ஆப்பிள் பதில் அளித்து வருகிறது. கடந்த 7 வருடமாக இயங்கி வரும் இந்த தளத்தில் அவ்வப்போது சில சிறிய தவறுகள் நிகழ்வது வழக்கம். ஆனால் தற்போது மிகவும் பெரிய தவறு ஒன்று நடந்துள்ளது.
இதில் ஒரு உபயோகிப்பாளர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிர்ம்ப் வயது என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு சிரி அளித்த பதிலில் டொனால்ட் டிரம்புக்கு 72 வயதாகிறது என தெரிவித்ததுடன் அவரைப் பற்றிய சிறு குறிப்பும் புகைப்படத்தையும் அளித்துள்ளது. அந்த விவரங்களில் டிரம்ப் புகைப்படத்துக்கு பதிலாக ஒரு ஆண்குறியின் படம் காட்டப்பட்டுள்ளது. இது இணைய உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விவரம் அறிந்த சிரியின் அதிகாரிகள் இந்த தகவலை உடனடியாக நீக்கி உள்ளனர். ஒரு சில விஷமிகள் டிரம்பின் புகைப்படங்கள் உள்ள தளத்தில் ஆண்குறியின் படத்தை பதிந்ததால் இந்த தவறு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த பதிவு நீக்கப்பட்ட போதிலும் அந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட் இணயத்தில் பரவி வருகிறது