Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்கா விடுதலை பெற்ற நாள்

July 5, 2021
in News, World
0
அமெரிக்கா விடுதலை பெற்ற நாள்

1776-ம் ஆண்டு ஜுலை 4-ந்தேதி இந்த பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில்தான் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. 1770-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு காரணமாக அமைந்தது.

இப்போர் 1775-ம் ஆண்டு முதல் 1781-ம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன்14, 1775-ல் பிலடெல்பியாவில் கூடிய கண்ட மாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தை அமைத்தது. அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் குறிப்பிட்ட அந்நியப்படுத்த முடியாத உரிமைகள்” அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது.

1776-ம் ஆண்டு ஜுலை 4-ந்தேதி இந்த பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த தேதியில்தான் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியல் சட்டம் 1788-ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. புதிய குடியரசின் முதல் செனட், பிரதிநிதிகள் அவை, மற்றும் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன்-1789-ம் ஆண்டில் பதவியேற்றுக் கொண்டனர்.

தனிநபர் சுதந்திரத்தின் மீதான ஐக்கிய கட்டுப்பாடுகளை தடைசெய்வது மற்றும் பல வகையான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான உரிமைகள் மசோதா 1791-ம் ஆண்டில் நிறைவேறியது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா எளிமையாக நடந்தது

Next Post

கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி

Next Post
கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி

கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures