புதிய ஆண்டில் அரசாங்கத்திற்கு புதிய தோற்றத்தை ஏற்படுத் அரசாங்கத்தின் பிரதானிகள் திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், புதிய ஆண்டில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய அரசாங்கத்தின் பிரதானிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர், இது சம்பந்தமாக ஜனாதிபதியிடம் விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் இந்த மூன்று அமைச்சர்களுடன் அரசாங்கத்தை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் பசில், ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]