அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஹார்வி புயல், சமீபத்தில் தான் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில் வீசிய பலத்த காற்றினாலும் மழையினாலும் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால், 1.30 கோடி பேர் பாதிக்கப்பட்டதுடன் பல உயிர்பலி. மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.இந்நிலையில், அமெரிக்காவை ஒட்டியுள்ள கரீபியன் கடல் பகுதியில், ‘இர்மா’ எனும் புதிய புயல் உருவாகியுள்ளது. இந்த புயல், புளோரிடா உட்பட, தென் மாகாணங்களை தாக்கும் என்றும், கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும், வானிலை மையம் கூறி உள்ளது. இதையடுத்து, கடலோர பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மரங்களும், மின் கம்பங்களும் சாயும் வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட துறையினர் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா அருகே உள்ள மற்ற நாடுகளிலும், புயல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.