அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குழந்தை துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
புளோரிடாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சில மணிநேரத்தின் முன்னர் கொலையொன்று இடம்பெற்ற பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 8வயது சிறுமி ஊடகவியலாளர் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
சில மணிநேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய நபரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக மற்றுமொரு செய்தியாளரும் எட்டு வயது சிறுமியின் தாயாரும் காயமடைந்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை குறித்து செய்தி சேகரிப்பில் ஸ்பெக்டிரம நியுஸ் 13 இன் இரண்டு நிருபர்கள் ஈடுபட்டிருந்த வேளை முன்னர் இடம்பெற்ற கொலை சந்தேகநபரான பதின்ம வயது இளைஞர் அந்த பகுதிக்கு வந்துள்ளார்.
அவர் இவர்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டாரா என்பது தெளிவாகவில்லை.
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்;டுள்ளார் அவர் ஒத்துழைப்பு வழங்குகின்றார் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓர்லன்டா பைன்ஹில்ஸ் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
பத்திரிகையாளர்கள் வாகனமொன்றில் காணப்பட்டவேளை துப்பாக்கிதாரி அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
சிலமணிநேரங்களிற்கு முன்னர் காரில் வைத்து 20 வயது பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்களே தாக்கப்பட்டனர் அதன் பின்னர் அந்த நபர் வீடொன்றிற்குள் நுழைந்து தாய் மகள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.