ஒரு சக்திவாய்ந்த புயல் தெற்கு அமெரிக்காவில் சூறாவளியை உருவாக்கியதோடு, அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலைகளை கொண்டு வந்துள்ளது.
கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நியூயோர்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
இந்த பனிப்புயலால் நியூயோர்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புயலால் டெக்சாஸில் பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
வீதிகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.