வட கரோலினாவின் வின்ஸ்டன்-சேலம்மில் அமைந்துள்ள ஒரு உர ஆலையொன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினைடுத்து, பாரிய வெடிப்புக்கான சாத்தியக்கூறு காரணமாக ஆலையை அண்மித்த சுமார் 6,500 குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
வடக்கு செர்ரி தெருவில் உள்ள நெசவாளர் உர ஆலையில் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை இரவு தீப் பரவல் ஆரம்பமாகியுள்ளது.
ஆலையில் அம்மோனியம் நைட்ரேட் பாரிய அளவில் வெடிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந் நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
தீ விபத்தினால் உயிர் சேதங்களோ அல்லது காயங்களே இதுவரை பதிவுசெய்யப்படவில்லை.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]