அமெரிக்காவின் நலன்களை தங்கள் நலனுக்காக கனேடியர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இந்த வாரத்திற்கான பேச்சுவார்த்தை உடன்பாடின்றி நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ட்ரம்ப் “எனக்கு மிகவும் பிடித்த நாடு கனடா, ஆனால் அமெரிக்காவின் நலன்களை தங்கள் நலனுக்காக கனேடியர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாக” தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கனடாவை தொடர்ந்தும் உள்ளடக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

