இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (8) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 2022 பொருளாதார நெருக்கடியின் போது பாதுகாப்பு அமைச்சுடன் நெருக்கமாகப் பணியாற்றியது முதல், ‘திட்வாஹ்’ சூறாவளிக்கான எமது கூட்டு நடவடிக்கை மற்றும் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான எமது தொடர்ச்சியான முயற்சிகள் வரை – அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பைக் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


