Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கை மீறிய 5185 பேர் அதிரடியாக கைது!

March 28, 2020
in News, Politics, World
0
அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கை மீறிய 5185 பேர் அதிரடியாக கைது!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் அதனை மீறி பாதைகள், குறுக்கு வீதிகளில் நடமாடுவோர், ஒன்று கூடுவோர் என 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காலத்தின் போது வழங்கப்பட்ட சில சலுகைகளை பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்ததை அடுத்து அரச ஒசுசல தவிர்ந்த மருந்தகங்கள், ஏனைய அனைத்து விதமான வர்த்தக நிலையங்களையும் மூட உத்தரவிட்டதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 1293 வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஊரடங்கை மீறுவது குறித்து கைது செய்யப்படும் எவருக்கும் இனிமேல் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகளில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி செயற்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே, ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலத்தில் வௌியே செல்ல வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் மாத்திரமே இந்த காலப்பகுதியில் பயணிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

கடந்த 24 மணித்தியாலங்களில் எவரும் அடையாளம் காணப்படவில்லை

Next Post

வடமாகாணம் அபாய வலயமாக அறிவிக்கவில்லை!

Next Post

வடமாகாணம் அபாய வலயமாக அறிவிக்கவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures