பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன். இவர்கள் இணைந்து நடித்து 1973-ம் ஆண்டு வெளிவந்த படம் அபிமான். ஹிருஷிகேஷ் இயக்கியிருந்தார். இப்படத்தை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது.
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் இப்படத்தை இயக்குவார் என தெரிகிறது. அமிதாப் – ஜெயா ரோலில் அவர்களின் மகனும், மருமகளுமான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயையே நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார். இதுதொடர்பாக இருவரிடமும் பேசி வருவதாகவும், இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.