தாம் யாருடனும் கூட்டுச் சேர மாட்டோம் எனவும் அப்பம் சாப்பிட்டு தலைகளை மாற்றி ஆட்சி அமைக்கும் தேவை தமக்கு இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்கள் தந்த ஆணையை மதித்து அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலையை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலினூடாக புதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்ய இடமளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சதி செய்து எதிர்க் கட்சியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுடனும் பேசி, அப்பம் சாப்பிட்டுக் கொண்டே கலந்துரையாடல் நடாத்தி ஆட்களைச் சேர்த்து அரசாங்கம் அமைக்க தாம் ஒரு போதும் தயாரில்லையெனவும் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.