அபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசரும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதித் தலைவருமான ஷேக் மொஹம்மட் பின் சயிட் அல் நஹ்யான் (Sheikh Mohammed bin Zayed Al Nahyan) தமது நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டுமென்ற தனது எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு வருகை தருமாறும் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
முடிக்குரிய இளவரசரின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவரது அழைப்பினையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

