Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!

July 30, 2018
in News, Politics, World
0
அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!

வடக்கு –கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகளுக்­காக அரச தலை­வ­ரால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணி­யின் முத­லா­வது கூட்­டம் கொழும்­பி­லுள்ள அரச தலை­வர் செய­ல­கத்­தில் இன்று மாலை 3 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

செயல­ணி­யின் கூட்­டத்­தில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்று வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அரச தலை­வ­ருக்கு கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தா­லும் இன்­றைய கூட்­டத்­தில் அவர் பங்­கேற்­பார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

கூட்­டத்­தில் பங்­கேற்று வடக்கு அபி­வி­ருத்திகள் தொடர்­பான விட­யங்­களை முன்­வைப்­பார். இனி­வ­ரும் கூட்டங்­க­ளில் பங்­கேற்­கா­மைக்­கான கார­ணங்­க­ளை­யும் இதன்­போது அவர் வெளிப்­ப­டுத்­து­வார் என்று கூறப்­ப­டு­கின்­றது.அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால் வடக்கு – கிழக்கு மாகாண அபி­வி­ருத்­தி­காக சிறப்­புச் செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. 48பேர் செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்­கள்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் தொடர்­பான விவ­ரங்­க­ளைச் செய­லணி திரட்­டி­யுள்­ளது.

திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும்­போது எதிர்­கொண்ட சவால்­க­ளை­யும் பட்­டி­ய­லிட்­டுள்­ளது. இன்­றைய கூட்­டத்­தில் இந்த விட­யங்­கள் முன்­வைக்­கப்­பட்டு ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை, அர­சி­யல் தீர்­வின் பின்­னரே அபி­வி­ருத்தி என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.

செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் பங்­கேற்­கப் போவ­தில்லை சில கார­ணங்­க­ளைப் பட்­டி­ய­லிட்டு அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ள­தாக கடந்த 11ஆம் திகதி ஊடக அறிக்கை ஊடாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

இருப்­பி­னும் இன்­றைய கூட்­டத்­தில் முத­ல­மைச்­சர் பங்­கேற்­பார் என்று அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன. இதற்­காக கொழும்­பில் முத­ல­மைச்­சர் தங்­கி­யுள்­ளார்.

தனது அதி­கா­ரி­க­ளுக்கு, இன்­றைய கூட்­டத்­துக்­கு­ரிய விட­யங்­க­ளைத் தயார்­ப­டுத்­து­மாறு முத­ல­மைச்­சர் ஏற்­க­னவே பணித்­துள்­ள­தா­க­வும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கூட்­டத்­தில் பங்­கேற்­கப் போவ­தில்லை என்று அவ­ச­ரப்­பட்டு முத­ல­மைச்­சர் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தார். முத­லா­வது கூட்­டத்­தில் பங்­கு­பற்றி, வடக்கு அபி­வி­ருத்­தி­யின் தேவைப்­பா­டு­களை வலி­யு­றுத்தி, இந்­தச் செய­ல­ணி­யில் தொடர்ந்து பங்­கேற்­கா­மைக்­கு­ரிய கார­ணங்­களை அறி­வித்­து­விட்டு பங்­கேற்­கா­மல் விடு­வதே சிறந்­தது என்று முத­ல­மைச்­ச­ருக்கு சில தரப்­புக்­கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளன.

வடக்கு அபி­வி­ருத்தி தொடர்­பில் திட்­ட­மி­டு­வ­தற்கு முத­ல­மைச்­சரை அழைத்­தும் அவர் வர­வில்லை என்று அரச தரப்­புக்­கள் தெரி­விக்­கக்­கூ­டும்.

கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இந்­தச் செய­ல­ணி­யில் உள்­வாங்­கப்­ப­டா­விட்­டா­லும், முத­ல­மைச்­சர் பங்­கேற்­கா­விட்­டால் அந்­தத் தரப்­புக்­கள் ஊடாக அரசு இத­னைக் கையா­ளக்­கூ­டும் என்­றும் முத­ல­மைச்­ச­ருக்கு ஆலோ­சனை வழங்­கிய தரப்­புக்­கள் கூறி­யுள்­ளன. இத­னை­ய­டுத்து அவர் தனது முடிவை மாற்­றிக் கொண்­டுள்­ளார்.

இதற்கு அமை­வாக இன்­றைய கூட்­டத்­தில், பங்­கேற்று வடக்கு அபி­வி­ருத்தி தொடர்­பான திட்­ட­வ­ரைவை முன்­வைப்­ப­து­டன், தான் ஏற்­க­னவே அரச தலை­வ­ருக்கு அனுப்­பிய கடி­தத்­தில் கூறப்­பட்ட விட­யங்­க­ளை­யும் செய­ல­ணிக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வார் என்­றும் அறி­ய­மு­டி­கின்­றது.

Previous Post

இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளின் பயன்பாட்டுக்கான சமிக்ஞைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு திட்டம்

Next Post

யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் பயங்­க­ரம்

Next Post

யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் பயங்­க­ரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures