Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அன்று கல் மனிதன் என்று ஒதுக்கிய மக்கள்: இன்று அவனுக்கு ஏற்பட்ட நிலை?

April 5, 2017
in News
0
அன்று கல் மனிதன் என்று ஒதுக்கிய மக்கள்: இன்று அவனுக்கு ஏற்பட்ட நிலை?

வங்கதேசத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை தோல் நோய் தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறது.

வங்கதேசத்தைச் சேர்ந்தவன் Mehendi Hassan (8) . இச்சிறுவனுக்கு அரிய வகை தோல்வியாதி ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சிறுவனின் உடல்களில் உள்ள தோல்களில் தடித்த செதில் போன்றும், மணல்களில் இருக்கும் கற்களை போன்று காணப்பட்டது. வீடியோவை பார்க்க

இதனால் அவனை கிராமமக்கள் உட்பட பலரும் நிராகரித்தனர். மேலும் Mehendi Hassan னின் பெற்றோர் சிகிச்சைக்காக யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும் என்றும் அரசாங்கமும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டிருந்தனர்.

இந்த நோயை குணப்படுத்துவது கடினம் எனவும் கூறியிருந்தனர். இந்நிலையில் அச்சிறுவனின் உடலில் தென்பட்ட தடித்த செதில் போன்ற அமைப்பு தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறது.

குணமடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுவன் குணமடைந்து வருவது ஒரு வியப்பூட்டும் செயல் தான் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், தன் மகனின் நிலையை அறிந்த ஒரு தொண்டு நிறுவனம், உதவ முன்வந்தது.

அதன் பின் கடந்த ஒரு மாதம் எடுத்த சிகிச்சை முறைகளால் அவன் தன் கைகளாலே சாப்பாடு சாப்பிடுகிறான், பொம்மைகளை வைத்து விளையாடுகிறான் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் தன் மகனின் நிலை செய்தியாக வெளியானதால், அதை அறிந்து பலரும் தன் மகனின் சிகிச்சைக்காக உதவினர்.

அவர்கள் உதவிகள் இல்லையெனில் தன் மகன் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டான் எனவும், மகன் தற்போது குணமடைந்து வருவதால், அன்று பயந்த மக்கள் தற்போது தன் மகனுடன் சகஜமாக பழகுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது பள்ளிகளிலும் அவன் அனுமதிக்கப்படுகிறான் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், இதே போன்று சிகிச்சை முறையை Mehendi Hassan தொடர்ந்து எடுத்து வர வேண்டும் என்றும் குறைந்த பட்சம் நான்கு வருடங்களாவது தொடர்ந்து எடுத்து வர வேண்டு என்று கூறியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வரும் போது ஒரு நாள் கண்டிப்பாக இந்த நோய் குணமடையும் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

மூன்று கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை: உணர்ச்சிவசப்பட்டு பேசிய தாய்

Next Post

ரஷ்ய மெட்ரோ நிலையம் தாக்குதல்: பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது

Next Post
ரஷ்ய மெட்ரோ நிலையம் தாக்குதல்: பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது

ரஷ்ய மெட்ரோ நிலையம் தாக்குதல்: பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures