Friday, September 5, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரிபொ­ருள் வழங்­கல்

February 18, 2018
in News, Politics, Uncategorized, World
0

14 ஆயி­ரம் மெற்­றிக் தொன் எரி­பொ­ருளைச் சேமித்து வழங்­கக் கூடிய நான்கு பெரும் கொள்­க­லன்­கள் விரை­வில் காங்­கே­சன்­து­றை­யில் நிறு­வப்­பட்டு வடக்­கின் அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரிபொ­ருள் வழங்­கல் இடம்­பெற நட­வ­டிக்க எடுக்­கப்­ப­டும்.

இவ்­வாறு கொழும்பு பெற்­றோ­லிய அமைச்­சர் அர்­ஜூன ரண­துங்க தெரி­வித்­தார். நேற்று யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்த அமைச்­சர் வடக்கு மாகாண எரி­பொ­ருள் வழங்­கு­நர்­க­ளைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.

இந்­தச் சந்­திப்பு யாழ்ப்­பா­ணம் பொது­நூ­லக மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்­தா­வது,
–
யாழ்ப்­பா­ணம் காங்­கே­சன்­து­றைப் பகு­தி­யில் எரி­பொ­ருளை சேமித்து வைத்து வடக்­கின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரி­பொ­ருளை வழங்க நாம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம். காங்­கே­சன்­து­றை­யில் 6 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு எமக்­குக் கிடைத்­துள்­ளது. நாம் பத்து 10 ஏக்­க­ரைக் கோரி­யி­ருந்­த­போ­தும் பகு­தி­ய­ளவு நிலமே கிடைத்­துள்­ளது.

எமக்கு கிடைத்­துள்ள இடத்­தில் 14 ஆயி­ரம் மெற்­றிக் தொன் எரி­பொ­ருளை சேமித்து வழங்­கத் தீர்­மா­னித்­துள்­ளோம். இந்­தத் திட்­டத்தை இந்த நாடு இறு­திக்­குள் நிறை­வேற்ற முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளோம்.

7 ஆயி­ரம் மெற்­றிக் தொன் பெற்­றோல் தாங்கி ஒன்­றும், ஐந்து மெற்­றிக் தொன் டீசல் தாங்கி ஒன்­றும் மேல­தி­க­மாக ஒவ்­வொரு மெற்­றிக் தொன் தாங்­கி­கள் இரண்­டும் என மொத்­த­மாக நான்கு தாங்­கி­கள் அமைக்­கப்­பட்டு மொத்­த­மாக 14 ஆயி­ரம் மெற்­றிக்­தொன் எரி­பொ­ருள்­களை சேமித்து வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

காங்­கே­சன்­துறை பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்த எரி­பொ­ருள் தாங்­கி­க­ளுக்கு சிறிய கப்­பல்­கள் ஊடாக எரி­பொ­ருள்­களை நிரப்ப உத்­தே­சித்­துள்­ளோம்.இந்த சேமிப்பு தாங்­கி­கள் ஊடாக மிகக் குறைந்த செல­வில் வடக்­கின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரி­பொ­ருள்­களை வழங்க முடி­யும்.- என்­றார்.

Previous Post

அரசு உருப்­ப­டி­யாக எதை­யும் செய்­ய­வில்லை : எம்.ஏ.சுமந்­தி­ரன்

Next Post

தலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் துப்பாக்கிசூடு

Next Post

தலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் துப்பாக்கிசூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures